டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நதிகளில் பாயும் தண்ணீரால்
நாடு செழிக்கும் ; நம் மக்கள் வாழ்வார்.
நாளத்தில் செல்லும் செந்நீரால் உடல்
நலம் பெருக்கி  வாழ்வார் நம் மக்கள்.

மாசனைத்தும் சிறு நீரக நுண்   
வலையால் தனிப்பட்டு வெளியேறும்.
தூயதான குருதி ஓடி எல்லா
துணை உறுப்புக்கும்  உணவூட்டும்.

நதிநீர் ஓடும் வாய்கால் கரையில்
நம் உழவர் வயலைப் பயிரிட்டு
உணவைப் பெருக்கி ஊட்டிடுவர்
உறுபசி பஞ்சம் போக்கிடுவர்.

தண்ணீரை நாம்  தடுப்பதனால்
தரணியெங்கும் வறட்சியாகும்
செந்நீரை நிணம்  தடுப்பதனால்
தேகமெங்கும் நோயாகும்.

இரத்த தானம் செய்திடுவோம் எளியோர்
இன்னுயிர்களைக் காத்திடுவோம்;
தண்ணீரை தேவையில்   விடுவித்து
சமாதான சகவாழ்வை போற்றிடுவோம்.
இந்தியா ஓர் நாடாகும் ; நாமெல்லாம்
இந்தியத்தாய் பெற்ற மக்களவோம்  
என்றுறுதி கொண்டே   வாழ்ந்திடுவோம்
அன்றி முற்றும்  முழுதாய் வீழ்ந்திடுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.